நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோனி புதிய சாதனைப் படைத்துள்ளார்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் தோனி புதிய சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் 2020 தொடர் , கொரொனாவால் இந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு மேட்சுகளும் வாழ்வா சாவா என்று பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது.
இந்நிலையில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை அணி சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் ஆகிய முன்னணி இரு வீரர்கள் இல்லாததால் தள்ளாடியது.
அதன் பின் முதல் மேட்ஸைத் தவிர மற்ற அனைத்திலும் சோபிக்கவில்லை. அதனால் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.
இந்நிலையில் நேற்று வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் சென்னை அணி 179 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த மேட்சில் தோனி ஒரு வரலாற்றுச் சாதனைப் படைத்தார். ஐபிஎல் 100 கேட்சுகளைப் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்தார்.
இதற்கு முன் தினேஷ் கார்த்திக் 103 கேட்சுகள் பிடித்து முதலிடத்தி உள்ளார்.