இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டனில் சென்று குடியேற உள்ளதாக செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.
பிரிட்டனில் 300 ஏக்கர் பரப்பளவில் ஹோட்டலாக இருந்த ஸ்டோக் பார்க் பங்களாவை 592 கோடிக்கு அவர் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்தே 2022 ஏப்ரல் மாதம் அங்கு குடும்பத்தினருடன் குடியேற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த செய்திக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் குடியேறவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை என்பதை அந்த நிறுவனம் தெளிவு படுத்தியுள்ளது.
மேலும், சமீபத்தில் ஸ்டோக் பார்க் தோட்டத்தை கையகப்படுத்திய RIL குழும நிறுவனமான RIIHL, பாரம்பரிய சொத்தை முதன்மையான கோல்ஃப் மற்றும் விளையாட்டு விடுதியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறது ” என அந்த நிறுவனம் விளக்கமாக தெரிவித்து இருக்கிறது.
முகேஷ் அம்பானியும் தாங்கள் லண்டன் சென்று குடியேற உள்ளதாக வெளியிடப்பட்டு வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.