
அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் உள்ள டலாலா மற்றும் விங்கானோனுக்கு இடையில் சாலையில் யாராவது புதிய நபர் பயணித்தால் ஒரு அசாதாரணமான பொருள் சாலையோரத்தில் இருப்பதை பார்க்கலாம். நாசாவின் விண்வெளி ஓடம் ஏதோ வானில் இருந்து தவறி கீழே விழுந்துவீட்டதா என நினைத்துவிடுவார்கள். ஆனால் அது உண்மையில் ஒரு சிமெண்ட் கலவை செய்யும் இயந்திரம் தான்.
1959 ஆம் ஆண்டில், Oologah ஏரியின் அருகே கட்டப்பட்டு வந்த ஒரு பாலத்திற்காக கான்க்ரீட் கலவையை ஏற்றி செல்லும் வாகனம் ஓன்று சாலையில் தடம் புரண்டு விழுந்தது. அப்போது கலவை கலக்கும் இயந்திரம் உருண்டு கீழே விழுந்தது. சேதமான பொருட்களை அகற்றுவதற்கும் அந்த இயந்திரத்துக்குள் இருந்த கான்க்ரீட் இறுகி கடினமாகி விட்டது.இயந்திரத்தை நகர்த்துவது மிகவும் கனமானது என்று குழு முடிவு செய்து, அதை சாலையின் ஓரத்தில் புதைக்க முடிவெடுத்தது. ஆனால் உள்ளூர்வாசிகள் அதை அந்த ஊரின் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கட்டும் என அப்படியே விட முடிவு செய்தனர்.
2011 ஆம் ஆண்டில், உள்ளூர் கலைஞர்களான Barry and Heather Thomas ஆகியோர் தங்கள் 5 வது திருமண ஆண்டு விழாவை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்தனர். அதற்காக பல ஆண்டுகளாக அங்கு கிடந்த அந்த கான்க்ரீட் இயந்திரத்தை ஒரு விண்கலம் போல வடிவமாக செய்ய முடிவெடுத்தனர். அதற்கு வண்ணங்களை பூசி, அமெரிக்க கோடியை வரைந்து , நாசாவின் லோகோவை பொறித்து மேலும் அதை இன்னும் உண்மையானதை போல காட்ட thrusters எனும் பாகத்தின் மாதிரியையும் பொருத்தினர். இதனால் இன்றுவரை வாகனம் ஓட்டும் எவரும் அதை ஒரு உண்மையான விண்கலம் என்று தவறாக புரிந்து கொள்வார்கள்.