தேசிய விருது பெற்றால்தான் நயன்தாரா திருமணம் செய்துகொள்வார் என்ற தகவல் பரவிவருகிறது.
தேசிய விருது பெற்றால்தான் நயன்தாரா திருமணம் செய்துகொள்வார் என்ற தகவல் பரவிவருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயந்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நானும் ரவுடிதான் என்ற படத்தின் போது காதல் உருவானதாக வெளியான தகவல் அனைவருக்கும் தெரியும்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் எங்குச் சென்றாலும் அது பிரபல ஊடங்களில் கவனம் பெறும்.
இவ்விருவரின் ரசிகர்களும் இவர்களைக் குறித்த செய்திகளை வைரலாக்குவார்கள்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன் தாரா இருவரும் எப்போது காதல் செய்வார்கள் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இவர்கள் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்திகள் பரவியது. சமீபத்தி இந்த ஜோடி தனி விமானத்தில் கேரளா சென்று ஓணம் பண்டிகை கொண்டாடினர். அதன் பின் கோவா சென்றனர். இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.
மேலும் தற்போது ஒரு வதந்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாரா எப்போது தேசிய விருது வாங்குகிறாரோ அப்போதுதான் அவர் திருமணம் செய்துகொள்வார் என்ற தகவல் பரவியுள்ளது.
இதனால் பலரும் நயன்தாராவுக்குப் பாராட்டும் விமர்சனங்களும் தெரிவித்து வருகின்றனர்.