கோவை: கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபரை உடனடியான கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக you tube சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக கடவுள் மறுப்பாளர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளன. இதனால் கடவுள் மறுப்பு பேசி வரும் திராவிட இயக்கங்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் தான் இன்று கோவை கோவை சுந்தராபுரம் அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயம் பூசியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்தவுடன் திமுக மற்றும் திராவிடர் கழகத்தினர் சம்பவ இடத்தில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் முக்கிய பிரச்சனைகளை திசைத்திருப்பவே இதுப்போன்ற செயல்களில் காவி அரசு ஈடுபட்டுவருவதாகவும், கடந்த சில நாட்களாகவே இதுப்போன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகிறார்கள் என கோவை கு.ராமகிருஷ்ணன், கீ. வீரமணி உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதோடு இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபரினை உடனடியான கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்துள்ளனர்.