இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணி முதலே மாணவர்கள், மாணவிகள் விண்ணப்பிக்க தொடங்கினர்.
அந்த வகையில் அறிவிப்பு வெளியான முதல் நாளான நேற்று வரை 23, 528 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இதில் 11, 121 பேர் விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும் என்ஜினியரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என உயர்கல்வி துறை எதிர்பார்த்து இருக்கிறது.