பிரிட்டிஷ் பேராசிரியர் ஒருவர் சமீபத்தில் இட்லியை ‘most boring food’, என்னால் அதைத் துளி கூட சாப்பிட முடியவில்லை என்று ட்வீட் செய்துள்ளார். அவ்வளவு தான்..ட்விட்டரின் ஒட்டுமொத்த தென்னிந்திய சமூகமும் புயல் வேகத்தில் இட்லிக்கு ஆதரவாகக் கிளம்பின! கீழே பாருங்கள் என்னென்ன பதிலளித்திருக்கின்றனர் என்று! பின்ன..நம் உணவின் முக்கிய அடையாளமே இட்லி தானே..!

பாவம்..உடனே ஒரு ட்வீட் போட்டு சமாளிக்க முயற்சித்தார்..
சஷி தரூரையும் இழுத்து விட்டது இந்த விவகாரம்!
ஒரு சிலர் ஆர்வத்தில், இட்லி சாப்பிட தங்களது பிடித்தமான முறைகளை முன்வைத்தனர்.
அவரால் பொறுக்க முடியவில்லை. இட்லி ஆர்டர் செய்து அதை ட்வீட் போட்டார். இன்னும் என் எண்ணம் மாறவில்லை. இட்லி எனக்கு பிடிக்கவேயில்லை என்று கூறியிருந்தார்.
ஆச்சர்யம் என்னவென்றால் ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகப் பேசினார்கள்.
இந்த விஷயம் இதோடு நிற்கவில்லை. இட்லியில் தொடங்கிய வாக்குவாதம், சாம்பாருக்கு நகர்ந்தது. இந்த ஊர் சாம்பார் தான் சூப்பர், இல்லை இந்த ஊரில் தன் சுவை அதிகம் என்றெல்லாம் டிவீட்கள் பறந்தன. அதில் ஒரு சில..இதோ
இவருக்கு மலையாளிகள் வைக்கும் சாம்பார் பிடிக்கவில்லை.
இவருக்கோ, இனிப்பான கர்நாடகா சாம்பார் மீது விருப்பம் இல்லை. அரைத்து விட்டு செய்தால் தான் சாம்பாராம்!
பாவம் அந்த மனுஷன்..போதுமடா இட்லியை நான் திட்டி வந்த பாடென்று உண்மையாக மன்னிப்பே கேட்டு விட்டார்!

இவர்களெல்லாம் தூங்கவே மாட்டார்களா..எல்லா நேரமும் எனக்கு பதில் அளிக்கிறார்களே என்று புலம்பினார். மேலும், இட்லி விரும்பிகள் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறார்களே…கேரளாவில் இருக்கும் என் மனைவி வீட்டார் என்னை மன்னிப்பார்களா? என்றும் வருந்தினார்.




