இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் குறிப்பிட்ட மதத்தை இழிவுப்படுத்திவிட்டாராம்.
அதாவது, பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற அரசியல் கட்சி இயங்கி வருகிறது. இவர்கள் தீவிரமான வலதுசாரி சித்தாந்தத்தை பின்பற்றுகிறவர்கள். பிரியாந்த குமார இந்தக் கட்சியின் ஒரு போஸ்டரை கிழித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த அரசியல் போஸ்டரில் மதத்தின் வாசகங்களும் அச்சிடப்பட்டிருந்ததாம். அதைதான் பிரியாந்த குமாரா கிழித்து குப்பையில் எறிந்து அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதை அங்கிருந்த சிலர் பார்த்துவிட்டு, பேக்டரியில் உள்ள மற்ற தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, பிரியந்தா குமாராவை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள்.
ஆத்திரம் தீராமல் அவரை தரதரவென சாலைக்கு இழுத்து வந்து அடித்து, உதைத்துள்ளனர். இந்த கொடுமையான சித்ரவதையால், சம்பவ இடத்திலேயே பிரியந்தா குமாரா தாக்கு பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார். கண்ணெதிரே அவர் சுருண்டு விழுவதை பார்த்தும்கூட அந்த கும்பலுக்கு ஆத்திரம் தீரவில்லை. பிரியந்தா குமாராவை நடுரோட்டிற்கு இழுத்து வந்து, தீவைத்து உயிருடன் எரித்தும் கொன்றுள்ளது.
இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து சிதறி கொண்ட நாலாபக்கமும் சிதறி தலைதெறித்து ஓடினர். மேலும் சிலர் கூட்டமாக திரண்டு வந்தனர். அங்கு பதற்றம் ஏற்பட்டதையடுத்து, போலீசார் விரைந்து வந்து, அந்த கூட்டத்தை அடித்து கலைத்தனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் தெஹ்ரிக்- ஏ-லைப்பைக் பாகிஸ்தான் என்ற அமைப்பினை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.. கண்டனம் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் ஹசன்கவார் தெரிவித்துள்ளார். இந்த மனிதாபிமானற்ற செயலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் ஒரு ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், “இது பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். இதில் தொடர்புடைய எல்லாருமே கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடந்து வருகின்றன” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.