திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காவலரின் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சம்பரை என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் காவலர் ராஜேஷ். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் அவரது பெயர் சரண்தீப். இவர் திடீரன்று அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க இவர் வெளியே சென்றபோது ஒரு தகராறு ஏற்பட்டு உள்ளது.

அந்த தகராறில் சரண்தீப் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த சரண்தீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பாக நிவாஷ் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.




