காதலோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, ஆன்லைன்-ல் சந்தித்தவரோ..மனதிற்கு பிடித்தவரை முதன் முறையாக நேரில் சந்திப்பது எப்போதுமே தனி அனுபவம் தான். சிறு பயமும், இனம்புரியா எதிர்பார்ப்பும் நிரம்பிய நாள் அது. எந்தவித தர்மசங்கடமான தருணங்களும் இல்லாமல் நல்ல நாளாக இதை மாற்றிக் கொள்வது முக்கியம். அதற்கான சில குறிப்புகள் இங்கே.
சரியான இடத்தை தேர்வு செய்யுங்கள்
ஒருவருக்கொருவர் தெரிந்துகொள்ளவும் , நீங்கள் எவ்வளவு ஒன்று படுகிறீர்கள் என்பதைக் கண்டு பிடிக்கவும் கவனம் செலுத்த ஏதுவான நடுநிலையான, இடத்தைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
ஆடம்பரமான ஆடை அல்லது விலையுயர்ந்த உணவை வாங்குவதற்கான அழுத்தம் இல்லாமல், சாதாரண சூழல் ஒரு ஈடுபாட்டுடன் உரையாட வசதியான இடமாக செயல்படுகிறது.
உரையாடலுக்குத் தயாராகுங்கள்
ஆர்வமுள்ளவர்கள், புத்திசாலிகள் மற்றும் பண்பட்டவர்கள் என்பதைக் காட்டும் வகையில் உரையாடல் தலைப்புகளைத் தேர்ந்தெடுங்கள். இதற்கு பெண்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.
ஒரு சில கேள்விகள் கேட்கலாம்: உலகில் யாரையும் தேர்வு செய்யலாம் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பாய்?
மிகவும் பொக்கிஷமான நினைவு எது?
உனக்கு மிகச் சிறந்த நாள் என்பது எது?
அவர்கள் தங்களைப் பற்றி ஏதாவது பகிர்ந்து கொள்ளும்போது அல்லது உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கும்போது, இதேபோன்ற கதையைப் பகிர்வதன் மூலம் அல்லது அதே கேள்வியை அவர்களிடம் கேட்பதன் மூலம் உரையாடல் நன்றாக அமைக்க முடியும்.
சிறந்த ஒரு உறவுக்கு நீங்கள் தகுதி உடையவர் தான் என்று நம்புங்கள். மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள் .
கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
கடந்தகால மோசமான டேட்டிங் அனுபவங்களை மறப்பது உங்களுக்கு சிரமமாக இருந்தால், எதிர்மறையைப் பற்றிப் பேசுவதை விட, நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள். கடந்தகால சூழ்நிலைகளை மேம்படுத்த நீங்கள் ஏதாவது செய்திருக்க முடியுமா? என்று சிந்தியுங்கள்.
இது உங்கள் சிறந்த சுயத்தை காட்டும் ஒரு வாய்ப்பாகும். உங்களை உங்கள் காதலன்/காதலி உங்களை எப்படி பார்க்க வேண்டுமோ அப்படி இருங்கள்.
முக பாவங்களில் கவனம் செலுத்துங்கள்
உண்மையில் வார்த்தைகளை விட, உங்கள் முக பாவங்கள், கை, கால் அசைவுகள் மூலம் நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் முக்கியமாகிறது.
உங்கள் காதலன்/காதலி பேசுவதில் நீங்கள் ஆர்வமாக இருப்பதைகே காட்ட, உங்கள் கைகளை கட்டிக்கொள்ளாதீர்கள். உங்கள் தலையை அவர்களை நோக்கி சாய்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்கள், மேலும் கேட்க விரும்புகிறீர்கள் என்ற கருத்தை இது வெளிப்படுத்தும்.
இம்ப்ரெஸ் செய்வது எப்படி?
அவர்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்பதன் மூலம் நீங்கள் ஆர்வமாக இருப்பதைக் காட்டுகிறீர்கள். இது உங்களை சுவாரஸ்யமானவர் என்று காட்டுகிறது.
உங்களுக்கு எதுவும் தெரியாத ஒன்றை உங்கள் காதலன்/காதலி பேசினால் , கூடுதல் தகவல்களைக் கேளுங்கள். அவர்கள் விரும்பும் தலைப்பில் பேச மகிழ்ச்சியாக அடைவார்கள். உங்களுக்கும் பிடித்த விஷயங்களைப் பேச வாய்ப்பு கிடைக்கும்.
எல்லா விஷயங்களும் ஒன்றினால் தான் நல்ல பொருத்தம் என்று எண்ண வேண்டாம்
செய்யும் வேலை, விருப்பங்கள், பிடிக்காத விஷயங்கள் இவற்றில் நீங்கள் ஒன்றவில்லை என்றாலும், உடனே நிராகரித்து விடாதீர்கள். இதையும் தாண்டிய சில விஷயங்கள் இருக்கிறது.
ஒரு மனிதராக நீங்கள் யார், உங்கள் காதலன்/காதலி யார் என்ற அந்த நிலையில் இருவரும் ஒன்றலாம். ஈர்ப்பு மற்றும் நல்ல உரையாடல்கள் மூலம் பழகிப் பாருங்கள்.
உழைப்பு, வாழ்க்கையை அணுகும் முறை, மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் போன்ற குணங்களில் எப்படி இருக்கிறீர்கள் என்று கவனியுங்கள்.
நேர்மறை எண்ணங்களைத் தவிர்த்து விடுங்கள்
உங்களுக்கான ஒருவரைக் கண்டுபிடிப்பது எளிதல்ல, ஆனால் அது நிகழும்போது அது மிகவும் மதிப்பு வாய்ந்தது. நீங்கள் அடைய விரும்பும் வேறு எந்த இலக்கையும் போலவே, அதைச் செய்ய முயற்சியும், நம்பிக்கையும் வேண்டும்.
என்ன உணவு ஆர்டர் செய்வது?
உணவை உட்கொள்வது மிகவும் நெருக்கமான அனுபவம். நம்மை வளர்ப்பதற்கும் ஆரோக்கியமாக வைப்பதற்கும் நாம் உணவை நம்புகிறோம். மேலும்,ஒரே மாதிரியான உணவுகளைச் சாப்பிடுவது நம்பிக்கையை வளர்ப்பதற்கான மற்றொரு அங்கம்.
ஒரே மாதிரியான உணவுகளை ஒன்றாகச் சாப்பிட்ட பங்கேற்பாளர்கள் இரு மடங்கு விரைவாக உடன்பாடுகளை எட்டினர், மேலும் வெவ்வேறு உணவுகளைச் சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடும்போது, தங்கள் பணத்துடன் தாராளமாக இருந்தனர் என்று ஆய்வு சொல்கிறது!
சரி, பேசக்கூடாத விஷயங்கள் என்னென்ன?
- முடிந்தவரை, பெற்றோர் பற்றிய விஷயங்களை பேசாதீர்கள்
- அரசியல் வேண்டவே வேண்டாம்
- அவர்களுக்கு ஏற்கனவே காதல்/திருமணம் இருந்ததா? என்ன நடந்தது போன்ற கேவிகளை விட்டு விடுங்கள்.
- உங்கள் முன்னாள் காதலன்/காதலியை நினைவில் வைக்காதீர்கள்
- உங்களது மோசமான மன நிலையைக் காட்டாதீர்கள் (அலுவலகத்தில் நடந்த சம்பவம், பயணத்தின் பொது நடந்த போக்கு வரத்து நெரிசல்)