அக்ஷய் குமார், இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில், தடை செய்யப்பட்ட பப்ஜிக்கு மாற்றாக வரவிருக்கும் மல்டிபிளேயர் வீடியோ கேம் செயலியான FAU-G’ஐ தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்ஷய் குமாரால் வெளியிடப்படும் இந்த அதிரடி-மல்டிபிளேயர் விளையாட்டு, இளைஞர்களுக்கு நமது வீரர்களின் தியாகங்கள் குறித்தும் சொல்லும் வகையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இந்த விளையாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருவாயில் 20 சதவீதம் பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது சமூக வலைததலத்தில் இது தொடர்பான செய்தியைப் பகிர்ந்து கொண்ட அக்ஷய் குமார், “பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில், ஒரு மல்டிபிளேயர் அதிரடி விளையாட்டை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.