கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிரமணியன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் 37 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்றுக் காரணமாக, பொதுமக்கள் மட்டுமின்றி, கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், அமைச்சர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் தொற்றுக் காரணமாக, சமீபத்தில் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மக்கள் நிதி மய்ய தலைவர் சுப்பிரமணியன் (70), கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
உயிரிழந்த சுப்பிரமணியன் , ஒரு மருத்துவர் ஆவார். இரண்டு முறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். சுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.