அமெரிக்காவின் 46 வது அதிபரானார் ஜோ பிடன். 2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் எவ்வித ஆட்சி அதிகாரத்திலும் அமர்ந்து இராத டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபரானார். அந்த அளவுக்கு செல்வாக்குடன் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் சறுக்கியது எதனால்?
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் குயின்ஸ் பகுதியில் 1947ஆம் ஆண்டு பெட்ரிக் – மேரி மெக்லியாட் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் டொனால்டு ட்ரம்ப். பென்னிசிலிவன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார படிப்பை முடித்த இவர் அதன் பிறகு தந்தையுடன் கட்டுமான தொழில் இறங்கினார். அதீத ஆர்வமும் சிறந்த திறமையும் கொண்ட இவர் தந்தையின் தொழிலை முன்னேற்றினார். இவரது ஆர்ட் ஆப் டீல் புத்தகம் உலகம் முழுவதும் புகழ் பெற்றது.
1999ஆம் ஆண்டு முதன் முதலில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய டிரம்ப் ரிபார்ம் கட்சியின் மூலம் அதிபர் தேர்தலில் நின்றார். முதல் சுற்றிலேயே குறைந்த ஓட்டுகளை பெற்றதால் தேர்தலில் இருந்து பின்வாங்கினார். அதன் பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தயாரித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், குத்துச்சண்டை வீரராகவும் இருந்தார்.
2016 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பும், ஒபாமா ஆதரவில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். இதில் டொனால்ட் டிரம்ப் 276 வாக்குகள் அதிகம் பெற்று அமெரிக்காவின் 45 வது அதிபர் ஆனார்.
எப்படி இருந்தது அதிபர் டிரம்பின் முதல் நூறு நாட்கள்?
அமெரிக்காவை பொறுத்த வரை ஒரு அதிபர் பொறுப்பேற்ற முதல் நூறு நாட்களின் நடவடிக்கைகளை வைத்தே அவரது வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறது. அதை வைத்து பார்த்தால் டிரம்பின் முதல் நூறு நாட்கள் மிகவும் மந்தமானதாகவே இருந்தது. தேர்தலின் போது அவர் அள்ளி தெளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் மதில் சுவர் கட்டுவது:
அதிபர் தேர்தலின் போது டிரம்ப் கொடுத்த மிக முக்கிய வாக்குறுதி அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லை நடுவே மதிற்சுவர் கட்டுவது, அதற்கு மெக்ஸிகோவினரிடமே பணம் வசூலிப்பது. இதைக் கேட்டு அப்போதிருந்த கூட்டத்தினர் ஆர்பரித்தார்கள். ஆனால் அந்த வாக்குறுதியை டிரம்ப் நிறைவேற்றினாரா என கேட்டால் அதற்கான பதில் இல்லவே இல்லை என்பது தான்.
ஒபாமா கேர்:
ஒபாமா கேர் எனப்படும் ஜனநாயக சுகாதார சீர்திருத்தத்தை தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே ரத்து செய்வேன் என டிரம்ப் உறுதி அளித்திருந்தார். ஆனால் சுகாதார திட்டத்துக்காக அவரது கட்சி கொண்டு வந்த புதிய மசோதா தோல்வியையே சந்தித்தது.
குடும்ப அரசியல்:
இந்தியாவில் குடும்ப அரசியல் மிகவும் பேர் போனது, ஆனால் அமெரிக்காவில் குடும்ப அரசியல் என்னும் விமர்சனத்திற்கு உள்ளானவர் டொனால்டு டிரம்ப்.
சர்ச்சைகளின் தலைவன் டொனால்டு டிரம்ப்:
சில அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்கள் பேசுவது எப்போதாவது தான் சர்ச்சையாக மாறும். ஆனால் டொனால்டு டிரம்ப் மட்டுமே எப்போது பேசினாலும் சர்ச்சையாகவே இருக்கும்.
அழகான பெண்களை முத்தமிடுவேன் :
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் பொது டொனால்டு டிரம்ப் நான் மிகவும் வலிமையானவனாக உணர்கிறேன், இதோ இந்த கூட்டத்திற்குள் நடந்து செல்வேன், கூட்டத்தில் இருக்கும் ஆடவர்களை முத்தமிடுவேன், அழகான பெண்களை முத்தமிடுவேன் நான் ஒன்றும் வயதானவன் கிடையாது , எப்பொழுதும் இளமையாக உணர்கிறேன் , நல்ல உடல் வடிவம் கொண்டிருக்கிறேன் என அவர் கூறியது கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது .
அறிவியலை அதிர்ச்சிக்குளாகிய டொனால்டு டிரம்ப் :
டிரம்ப் பேசும் கருத்துகள் உலக அளவில் கவனத்தை பெரும் அதே நேரம் கேலி கூத்தும் ஆகிவிடும் . கொரோனா கொடிய நோயாக உருவெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், கிருமிநாசினி கொரோனாவைக் கொல்லும் என்றால் அதனை நோயாளிகளின் உடலில் செலுத்திவிடலாம் என ஒரு கருத்தை கூறினார் இதனால் பொதுமக்கள் பலர் கொரோனா பாதித்தவர்கள் கிருமிநாசினியை குடிக்கலாமா என சுகாதாரத்துறைக்கு போன் செய்யும் அளவிற்கு ஆன பிறகு இவர் மிகவும் கூலாக மீடியா முன்பு வந்து நின்று வடிவேலு பாணியில் சும்மா சொன்னேன் என்று சொல்லிவிட்டு சென்றார். ஹைட்ராக்சி கிளோரோகுய்ன் மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் எனக் கூறினார். இதனை இவர் உடன் இருந்தவர்களே மறுத்துவிடவிட்டனர். அறிவியலை வைத்தே உலக நாடுகளுக்கு பூச்சாண்டி காட்டும் அமெரிக்காவுக்கு இப்படி ஒரு அதிபர் வாய்த்தது அவர்களது போறாத காலம்.
மீடியாக்களுக்கு டப் கொடுக்கும் டாப் ஹீரோ டொனால்டு டிரம்ப் :
டொனால்டு டிரம்பை பேட்டி எடுத்தாலே அன்றைய நாளுக்கான டிஆர்பி கிடைத்துவிடும் மீடியாக்களுக்கு.அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தண்னிடம் கேட்ட கேள்விக்கு ஜோ பிடன் ஒரு குற்றவாளி எனவும் அவர் மீது புகார் அளிக்காத நீங்களும் ஒரு குற்றவாளி உங்கள் ஊடகமும் ஒரு குற்றவாளி என நிருபரை பார்த்து கூறி சர்ச்சையை கிளப்பினார்.
எங்கே சறுக்கினார் டிரம்ப் ?
1.கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலக நாடுகளின் கண்ணோட்டத்தில் அமெரிக்கா குறித்த பார்வை மிகவும் மோசமானது. கொரோனா வைரஸை அமெரிக்கா கையாண்ட விதமும் இதற்க்கு ஒரு காரணம்.
2.பருவ நிலை மாற்றம் ஒரு ‘விலை உயர்ந்த புரளி,எனக் கூறும் டிரம்ப் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகினார் .
3.முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதித்தார். தற்போது இந்த தடை 13 நாடுகள் மீது உள்ளது. மேலும் அமெரிக்காவில் குடியுரிமை பெரும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது .
4.சீனாவுடனான வர்தகப்போரினால் அமெரிக்காவை சேர்ந்த விவசாயம் மற்றும் தொழில் மிகவும் பாதிப்படைந்தது.
அண்டை அயலாருடன் பார்த்து பேசி பழகும் அளவுக்கு நாட்கள் இருக்கும் காலத்தில் ஒரு நாட்டின் அதிபர் பேசும் வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானது? ஆனால் டிரம்ப் இதையெல்லாம் ஒரு போதும் யோசித்தது கிடையாது. ஒரு நாட்டை பற்றி சட்டென கடுமையாக விசாரிப்பது, ஆதாரம் இல்லா விஷயங்களை ஆர்ப்பாட்டமாக சொல்வது, மற்ற நாடுகளின் நம்பத்தகுந்த விஷயங்களை போலிசெய்தி எனக் கூறுவது என டிரம்ப் செய்த கலவரம் அதிகம்.
டிரம்ப் பிரசாரங்களில் இருந்த ஒரு வித்தியாசமான அரசியல் பார்வை, அவர் கொடுத்த வாக்குறுதிகள் என அனைத்தையும் நம்பி வாக்களித்த மக்களுக்கு அவர் ஒரு மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுத்தார். 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு இரண்டாம் முறை போட்டியிடும் முன்னாள் அதிபர் தோற்று இருக்கிறார் என்றால் அது நம் சர்ச்சை நாயகன் டொனால்ட் டிரம்ப் தான். .