கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம் 16-ஆம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்குகின்றது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கேரள அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்தது. கூட்டத்திற்கு பின்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், சபரிமலையில் மண்டல-மகர விளக்கு பூஜையின்போது நாள் ஒன்றுக்கு 250 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் மூலம் பதிவு செய்பவர்களுக்கே மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும், கோவிலுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை சான்று கொண்டுவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் மேலும் பம்பை ஆற்றில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், ஷவர் மூலம் பக்தர்கள் குளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.