கடந்த சனிக்கிழமை மாலை பரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வயது சிறுவன் விளையாடி கொண்டு இருக்கும் போது, தற்செயலாக ஒரு பாம்பு குட்டியை விழுங்கினான்.
ஒரு வயது சிறுவன் பாம்பை வாயில் போட்டுக் கொண்டு விழுங்கும் போது, அவனது தாய் வாயில் ஏதோ ஒன்று இருப்பதை பார்த்து விட்டார். அதற்க்குள் அந்த குழந்தை பாதி பாம்பை விழுங்கி விட்டது.
குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவனது பெற்றோர்
குழந்தையின் தந்தையான தரம்பால், ஒரு விவசாயி, குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் போது, குழந்தை விழுங்கிய, அந்த ஆறு அங்குல நீளமுள்ள இறந்த பாம்பையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.
சிறுவனுக்கு விஷத்தை முறிக்கும் ஊசி போடப்பட்டதாகவும், குழந்தை அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
குழந்தை விழுங்கிய பாம்பு அதிக விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளித்ததால் குழந்தையின் உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என மருத்துவ மனை சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது.