தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது சதயவிழாவையொட்டி பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறைப்பாடி வழிபாடு நடந்தது.
தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் தஞ்சை கோவிலை தமிழகத்துக்கு தந்த வள்ளல் இவர் ராஜா ராஜா சோழன். இவரின் 1035 ஆவது சதயவிழா தற்போது துவங்கி உள்ளது. இவரின் இடஙக சத்யாவிழாவை ஒட்டி தஞ்சையில் உள்ள இவரது சில்க்கு கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து தஞ்சை கோவிலின் பேறுடையாருக்கு தமிழின் இனிதான தேவாரப்பாடல்கள் பாடி ஆராதனை நடைபெற்றது. ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழாவையொட்டி பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவில் முதல்முறையாக தமிழில் வழிபாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல இனி வரும் ஆண்டுகளிலும் நடைபெறவேண்டும் என்று தமிழ் மக்களும் தமிழ் ஆர்வலர்களும் ஆசைப்படுகின்றனர்.