ஆழந்த தூக்கத்தில் இருந்த 52 வயது காதலனின் பிறப்புறுப்பை வெட்டி கழிவறையில் வீசிய 40 வயது பெண் நடந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தைவானில் சாங்ய கவுண்டியில் இருக்கும் க்சிஹு டவுன்ஷிப் இருக்கும் 52 வயது மதிக்கத்தக்க ஹுவாங் என்ற நபர் சம்பவத்தன்று நன்றக மதுவில் ஊறவைத்த கோழி நூடுல்ஸை சாப்பிட்டுவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் தூங்கியுள்ளார். அதன் பின் அவர் கண்விழித்து பார்த்த போது ரத்தப்போக்கு ஏற்படுவதைக் கண்ட போது கடும் அதிர்ச்சியடைந்தார். அவர் பிறப்புறுப்பு வெட்டப்பட்டிருந்தது.
அவருடைய காதலி 40 வயது மதிக்கத்தக்க ப்ஹுங் என்ற பெண்ணே செய்துள்ளார். அன்றைய தினம் சமையலறை கத்தரிக்கோலை பயன்படுத்தி இந்த கொடூரத்தை செய்துள்ளார். அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் இப்படி செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்ததால் விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின் ப்ஹுங்யிடம் விசாரித்த போது வெட்டி கழிப்பறையில் வீசிவிட்டதாக கூறியுள்ளார்.
இருப்பினும் மருத்துவர்களால் அதை மீண்டும் இணைக்க முடியவில்லை அந்த வீட்டில் இருந்து ரத்தக் கறையுடைய கத்தரிக்கோலை போலீசார் கண்டுபிடித்தனர். தீயணைப்பு படையின் செய்தித் தொடர்பாளர் உள்ளூர் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் காயமடைந்த நபர் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயலில் ஈடுபட்டவர் மோசமான தாக்குதல் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கொள்கிறார்.




