கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி அவர்களின் எழுதாவது பிறந்தநாளை நேற்று முன்தினம் பாஜகவும் பாஜகவின் தலைவர்களும் நன்றாக கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களில் கட்சி அமைச்சர்கள் மிகவும் ஆரவாரமாக செயல்ப்பட்டு வந்தனர். இவருக்கு பல பிரபலங்களும் தன வாழ்த்தை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமிழக பா.ஜனதா சார்பில் கட்சியின் தலைவர் எல்.முருகன் சென்னை தி.நகரில் 70 அடிக்கு கேக் வெட்டியதுடன் சாரட் வண்டியில் ஊர்வலமாக சென்றார். இதனால் பொது மக்கள் மிகவும் இடையூறை செந்தித்துள்ளனர்.
இதனால் கொரோனா காலத்தில் தடையை மீறி அனுமதியின்றி சாரட் வண்டியில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் எல். முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 100 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் மாம்பழம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோடியின் பிறந்தநாளுக்காக செய்த செயல்கள் தவறாக முடிந்துவிட்டது.