விவகாரத்தே பெறாமல் ஆறாவது முறையாக இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொள்ள முயற்சித்த பெண் மீது காவல்நிலையத்தில் வழக்கு.
கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரு காவல் நிலையத்திற்கு காதல் ஜோடி ஒன்று தஞ்சம் அடைய வந்தது. அதுகுறித்து விசாரித்தபோது, ” தாங்கள் காதலித்து வருகிறோம், எங்களது காதலுக்கு பெரும் எதிர்ப்பு உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பாக திருமணம் நடத்தி வையுங்கள் என அந்த காதல் ஜோடி காவல் நிலையத்தில் கூறியுள்ளது.
விசாரித்ததில், அந்த ஜோடி பிரியா (38), சந்துரு (22) என தெரிந்தது. இவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கையில் காதல் திருமணம் செய்துவைக்கக்கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடியை பார்த்து போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். இந்நிலையில், பசவராஜ், கிரண், ரமேஷ், துக்காராம் மற்றும் ஒரு வாலிபர் என 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்குவதை போல அரக்க பறக்க ஓடி வந்தனர்.
போலீசாரும் அவர்களை பெண்ணின் உறவினர்கள் என்று நினைத்ததுதான் தாமதம். வந்தவர்கள் பிரியாவின் 5 கணவர்கள் என்று அவர்கள் விஷயத்தை தாமதிக்காமல் கூறியுள்ளனர். அதில் ஒருவர் மூலம் பிரியா இரண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், வீட்டருகே வசித்து வந்த சந்துரு, பிரியா மீது வயதை மீறிய காதல் ஏற்பட்டுள்ளது. அதுபோல பிரியாவுக்கும் சந்துரு மீது திருமண உறவை மீறிய காதல் ஏற்பட்டுள்ளது. இளமையும், புதுமையும் பிரியாவை கட்டி இழுக்கவே, 5 கணவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை மறந்து 6 வது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். அதற்காக, சில துணிகளை எடுத்துக்கொண்டு, சந்த்ருவை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், 5 கணவர்களும் முறையே பிரியாவை அழைத்துக்கொண்டு மூளைச்சலவை செய்து பார்த்துள்ளனர். ஆனால், 6 வது திருமண வலையில் சந்த்ருவை வீழ்த்தியே ஆகவேண்டும் என நினைத்த அவர் தன்னுடைய முடிவில் இருந்து மாறவில்லை. அதேபோல, சந்துருவும் குணா பாடத்தை போல பிரியா மீது பேய்க்காதலை கொண்டதால் உதறிவிட்டு போக மனமில்லாமல் அங்கேயே நின்றுள்ளார். பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால், விவாகரத்து பெறாமல் இத்தனை பேரை திருமணம் செய்ததோடு, 6 வது முறையாக திருமணம் செய்ய முயற்சிக்கும் 38 வயதான பிரியா மீது போலீசார் சட்டபடி நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.