பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, செப். 27-
திருச்சியில் பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அவமதிப்பு
திருச்சி, இனாம்குளத்தூரில் உள்ள சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலையை மர்மநபர்கள் காவிச்சாயம் பூசி அவமதித்துள்ளனர். இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், பெரியார் சிலையை அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு கடும் கண்டனங்களை கூறிக்கொள்கிறேன். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




