சென்னை தியாகராயநகரில் 5 கிலோ நகை கொள்ளை வழக்கில், சம்பந்தப்பட்ட கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செவாய்க்கிழமை அவரின் கடையின் பூட்டை உடைத்து அவரின் 5 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துள்ளனர். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் தினகரன் மேற்பார்வையில், தென்சென்னை இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, தியாகராயநகர் துணை கமிஷனர் ஹரிகரபிரசாத், உதவி கமிஷனர் கலியன் ஆகிய போலீஸ் அனைவரும் கொள்ளைபோன இடத்திற்கு சென்று சோதனை செய்துவந்தனர்.
இதில் கொள்ளை அடுத்தவனை கண்டுபிடிக்க மூன்று பிரிவில் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். தனிப்படையும் தீயென செயல்பட்டு வருகின்றது. அந்த கொள்ளையடிக்கப்பட்ட சுற்றுத்தெருவில் மொத்தம் 120 கமெராக்கள் இருந்துள்ளது அதில் நாற்பது காமெராக்களில் திருடானது முகம் பதிவாகி உள்ளது. மேலும் அதை ஒரேசீரா சேகரித்து 45 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு காட்சிதொகுப்பாக ஆகியுள்ளார்.
வீடியோவின் தொடக்கத்தில் கொள்ளை நடந்த மூசா தெருவுக்கு பின்பக்க தெருவில் 2 கொள்ளையர்கள் இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறார்கள். நகைக்கடைக்குள் சென்ற கொள்ளை ஆசாமி மட்டும் மோட்டார்சைக்கிளை விட்டு இறங்குகிறார். இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவிடுகிறார். வண்டியிலிருந்து இறங்கி பின்னர் மதிசுவரின் ஏறி குதித்து மெதுவாக உள்ளே சென்றுள்ளார் அவன் முகத்தில் துணியால் மூடப்பட்டு இருந்தான். ஒரு மூட்டையுடன் வந்த நபர் அந்த லாக்கர் பூட்டை ஓடைத்துள்ளார். பின்னர் நகைகளையெல்லாம் மூட்டையில் அள்ளி போட்டுகொண்டு ஒரு மணி அளவில் வந்த வழியே திரும்பி அவர் இறக்கி விடப்பட்ட இடத்துள் சென்று நிற்கிறார் பின்னர் அவர் இறக்கி விட்ட அதே நபர் அவரை மீண்டும் வந்து அழைத்து செல்கிறார்.தற்போது வீடியோவில் இருக்கும் இரண்டு நபரையும் தனிபடை விரைவில் கைது செய்யும் என கூறியுள்ளனர் போலீசார்கள்.




