பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபல இளம் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4க்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கான இரண்டு டீசர்கள் அடுத்தடுத்து வெளியாயின. அந்த டீசர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது டீசர் அட்டகாசம் என புகழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.
இந்த டீசர்களின் மூலம் கடந்த மூன்று சீசன்களை போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இம்மாத இறுதிக்குள் தொடங்கும் என கூறப்படுகிறது.
பிக்பாஸ் 4 தொடர்பான பேச்சு எழுந்ததுவுடனேயே, யாரெல்லம் பங்கேற்கே போகிறார்கள் என அனுமானத்தின் அடிப்படையில் பல பிரபலங்களின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றனர். சினிமா ஹீரோயின்கள் முன்னாள் ஹீரோயின்கள், சர்போட்டிங் ஆர்ட்டிஸ்டுகள் டிவி நடிகர்கள் என பலரின் பெயர்கள் அடிப்பட்டு வருகின்றன.
ஆனால் அவரை பிக்பாஸ் குழு நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது. பின்னர் ஒரு கோடி ரூபாய் கேட்ட ஷில்பா மஞ்சுநாத்துக்கும் விஜய் டிவி எண்ட் கார்டு போட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக பெரும் பிரபலமான இளம் நடிகை ஒருவரின் பெயர் அடிப்பட்டுள்ளது. அதாவது, கும்கி, சுந்தரப்பாண்டியன், பாண்டியநாடு, கொம்பன் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் ஹீரோயினாக நடித்த லக்ஷ்மி மேனன் அது. நடிகை லக்ஷ்மி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் நடிகை லக்ஷ்மி மேனன் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.