எரிமலை குழம்பில் முட்டை ஆம்லெட் போட்ட விசித்திர மனிதர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பக்ரடல்ஸ்ஜால் எரிமலை கடந்த 800 ஆண்டுகளில் முதல் முறையாக மார்ச் 19ஆம் தேதி வெடித்து எல்லா திசைகளிலும் எரிமலை குழம்பை கக்கி வருகிறது.
எரிமலை வெடிப்பு காரணமாக ஐஸ்லாந்தின் சில பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன எரிமலை வெடிப்பதற்கு முன் நன்கு வாரங்களில் 4000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எரிமலை குழம்பில் ஒருவர் பன்றி இறைச்சியும், முட்டையும் சமைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இறைச்சி, முட்டை மட்டுமல்லாமல் பாத்திரமும் சேர்த்து எரிமலை குழம்பில் எரிந்துவிட்டது.




