டெலிவரி பாயிடம் மூக்கில் ரத்தம் வடிய அடிவாங்கிய பெண் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சொமாட்டோ ஊழியருடன் நடந்த வாக்குவாதத்தில் பெண் வாடிக்கையாளர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூரை சேர்ந்த ஹிட்டாச்சா சந்ரேன் என்ற பெண் சொமாட்டோ செயலி மூலம் மாலை 3.30 மணியளவில் உணவை ஆர்டர் செய்துள்ளார்
ஆர்டர் செய்த உணவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வந்தடையாததால் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் உணவை டெலிவரி செய்யும் அவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார் ஆடர் செய்த உணவை காலதாமதமாக கொண்டு வந்தது தொடர்பாக ஹிட்டாச்சாவுக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் ஹிட்டாச்சாவை திடீரென தாக்கியுள்ளார். இதனால் மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட ஹிட்டாச்சா சந்ரேன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.