மனைவியை கட்டிப்போட்டு பிறப்புறுப்பை நூலால் தைத்த கொடூர கணவன் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூரில் உள்ள நபர் ஒருவர் மனைவியின் மேல் சந்தேகத்தில் பிறப்புறுப்பை அலுமினிய நூலால் தைத்துள்ளார். அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து உள்ளார் போலீசார் அந்த கணவனை கைது செய்துள்ளார். அந்த பெண் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, விசாரிக்கையில் அந்த கணவர் மனைவியின் மீது வெகுநாட்களாக சந்தேகம் கொண்டு இருந்துக்கிறார். அவர் அந்த பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி பிறகு அவரது பிறப்புறுப்பை தைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு பிறகு அந்த கணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த பெண்ணுக்கு அதிகமான ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.
துடித்த அந்த பெண் முடிந்த வரை முயற்சி செய்து அருகில் வசித்து வரும் தன்னுடைய தாய்க்கு இந்த விஷயங்களை தெரிவித்தார். அவரது தாய் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அதன் பின்னர் அந்த தாய் மில்க் காவல் நிலையத்தில் தனது மருமகன் குறித்து புகார் அளித்துள்ளனர். அந்த கொடூர கணவரை கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவரின் பரிசோதனையில் கணவன் செய்த தவறு தெரியவந்துள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.