திருவண்ணாமலை வயலூர் கிராமத்தில் திருவேதிகை மலையில் உள்ள ஆறுமுக முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருப்படி திருவிழாவானது நடைபெறும். அதன்படி இன்று 59-ம் ஆண்டு திருப்படி விழா நடைபெற்றது. இதை ஒட்டி காலையில் ஆறுமுகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், தேன், கரும்புச்சாறு எல்லாம் கொண்டு அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் கொக்கி தேர் காவடி, பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடிகளை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்தனர் மேலும் இந்த விழா ஏற்பாடுகளை திருவிழாவின் உபயதாரர்கள், சுத்த சன்மார்க்க சங்கத்தினர், இளைஞர் மன்றத்தினர், வயலூர் கிராம பொதுமக்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.