திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பழைய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை உள்ளது. தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.சுமார் 20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.2 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலையானது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . மேலும் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வரும் தக்காளியின் விலையினால் அனைத்து தரப்பு மக்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.