கேரளாவின் தலைநகராக எர்ணாகுளத்தை மாற்றியமைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.யின் தனிநபர் மசோதாவிற்கு கேரள அரசானது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. காங்கிரஸ் எம்.பி. ஹைபி ஈடன் அவர்கள் கேரளாவின் தலைநகரத்தை திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு மாற்றியமைக்க வழி செய்ய வேண்டும் என கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள அரசு, தலைநகரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும், இது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் பதில் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.