தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 6 பணியிடங்களுக்கு (மொத்தம் 92 பணியிடங்கள்) ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://www.tnpsc.gov.in/ சென்று விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 27முதல் ஆகஸ்ட் 29ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். அக்டோபர் 30ம் தேதி (9:30 am to 12:30 pm) குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/Group%20-I%20Notification_English.pdf
TNPSC இணையதளத்திற்கு செல்ல இதை கிளிக் செய்யவும் https://www.tnpsc.gov.in/




