வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் போன்றவை, குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என இரு பிரிவினருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
சின்னக்காஞ்சி விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாட அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து, தென்கலை பிரிவினர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவில் விழாக்களின் போது வடகலை – தென்கலை பிரிவினர் மோதலில் ஈடுபட்டு வந்ததால், விழாக்கள் அமைதியாக நடக்க, கோவில் செயல் அலுவலர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்
இரு பிரிவுகளின் குருமார்களும் பெருமாளின் பாத கமலத்தில் இளைப்பாறும் நிலையில், அவர்களின் சீடர்கள் குருக்களின் பெயரால் மோதல்களை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.





