வயதுச் சான்றிதழ் மோசடியைக் கட்டுப்படுத்த பி.சி.சி.ஐ முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது
இந்திய கிரிக்கெட்டில் விதிமுறைகள் மற்றும் நெறிகளைப் பின் பற்றி சரியான வகையில் போட்டிகள் நடத்தும் பொறுப்புள்ள பி.சி.சி.ஐ நிறுவனம் ஆக்.3 ஆம் தேதி புதிய வழிமுறைகளை அறிவித்தது குடியேற்றம், வயது போன்றவற்றில் மோசடியை குறைக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரியம் பல முயற்சிகள் எடுத்து வருகிறது.

- பொய்யான சான்றிதழ் வாங்கியவர்கள் அதை ஒப்புக்கொண்டு, உண்மையான பிறந்த தேதியை தெரிவித்தால், இடைக்கால தடை ஏதுமின்றி பங்கு கொள்ளலாம் என்று கூறியுள்ளது
- 2020-21 முதல் போலிச் சான்றிதழ் வழங்கினால் எல்லா வகை போட்டிகளிலும் விளையாட 2 ஆண்டுகள் தடை
- சிறியவர் பிரிவில் 14 முதல் 16 வயது உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டோமிஸில் (Domicile) மோசடி செய்த வீரர்களுக்கு 2 ஆண்டுகள் தடை. அவர்களே முன்வந்து ஒப்புக்கொண்டாலும் தண்டனை உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 19 வயதிற்குட்பட்ட பிரிவில், பிறந்த தேதி பிறப்புச் சான்றிதழை விட 2 ஆண்டுகள் அதிகமாக பதிவிட்டிருந்தால், அவர்கள் எத்தனை வருடங்கள் விளையாடலாம் என்பதில் கட்டுப்பாடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி பேசுகையில், “அனைத்து பிரிவுகளிலும் சமமாக வாய்ப்புகள் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மோசடிகளை கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இது போன்ற மோசடிகள் இனி கடுமையாக தண்டிக்கப்படும் என்றும், கிரிக்கெட்டின் நேர்மையை பாதுகாக்க இவை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.




