வலிமை படத்தின் புதிய அப்டேட்டாக இப்படத்தில் நடிக்கும் அஜித்தின் ஃபிட் ஆன தோற்றம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தானுண்டு தன் வேலையுண்டு என்று எப்போதும் இருப்பவர். இதனால் அவருக்கு ரசிகர்கள் அதிகம். தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்கள். நேர்கொண்ட கொண்ட பார்வை என்ற படத்தின் வெற்றிக்குப் பின், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். கொரொனா கால ஊரடங்கிற்குப் பிறகு வலிமை படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. அங்கு நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வலிமை படத்தின் புதிய அப்டேட்டாக இப்படத்தில் நடிக்கும் அஜித்தின் ஃபிட் ஆன தோற்றம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.