நிவர் புயலானது கரையை கடந்து வேலூர் வழியாக செல்கிறது.
நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது. மூன்று நாட்களாக கடும் மழை பெய்து கொண்டிருந்த கடலோர பகுதிகளில் இன்று புயல் கரையை கடந்தது மழையும் சற்றே குறைந்து பெய்துகொண்டிருக்கின்றது. இதை தொடர்ந்து நேற்று முன்னாள் நிறுத்திவைக்கப்பட்ட பேருந்து சேவைகள் இன்று 12 மணி முதல் தொடங்கும் என தமிழக அரசு கூறியது.
இந்நிலையில் கடலிருந்து 109 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் நேற்று நள்ளிரவில் இருந்தே மழை விடாமல் பெய்து வருகிறது. தற்போது காலை 10 மணி முதல் 30 கிலோமீட்டரில் இருந்து 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. மேலும் 60 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அங்குள்ள சில தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதனால் அங்குள்ள மக்களெல்லாம் அருகில் இருக்கும் நிவாரண முகாமில் தஞ்சமடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தவையான சாப்பாடு மற்றும் தண்ணீர் அங்கு தரப்பட்டு வருகின்றது. ஐந்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அங்கு சென்று கோட்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை வரை வேலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என தமிழக வானிலை மையம் தெரிவித்துள்ளது.