சானியா மிர்ஷா வெளியிட்ட ”இரு குழந்தைகள்” வைரல் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வெள்ளிக்கிழமை (நேற்று) தனது இன்ஸ்டாகிராம் ஹாண்டிலில் “இரு குழந்தைகள்“ என ஒரு போட்டோவை போஸ்ட் செய்துள்ளார். 34 வயதான சானியா தனது மகன் இஷான் மிர்சா மாலிக் மற்றும் சானியாவின் சிஸ்டர் அனம் மிர்சா ஆகியோரின் போட்டோவிற்கு நெட்டிசன்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. டென்னிஸில் ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் சானியா என்பது நாம் அனைவருக்கும் தெரியும். சானியாவிற்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தனது டென்னிஸ் விளையாட்டின் மூலம் பலரையும் சானியா கட்டிபோட்டுளார். விளையாட்டின்மீது மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சானியா பாசக்காரர் தான். சமீபத்தில் இன்ஸ்ட்டாவில் ஷேர் செய்த போட்டோவில், சானியா தனது இரண்டு வயது குழந்தை மற்றும் தனது சகோதரி அனமுடன் நின்று கொண்டிருப்பதை காணலாம். ‘இந்த ரெண்டுபேரும் தான் என் குழந்தைகள்’ என்று அந்த போஸ்டில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வார தொடக்கத்தில், சானியா தனது தங்கையின் பிறந்தநாளை முன்னிட்டு தனது இளைய உடன்பிறப்புக்காக ஒரு உணர்ச்சிபூர்வமான போஸ்ட்டை இணையத்தில் ஷேர் செய்திருந்தார். மேலும் தனது தங்கையுடன் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான நெருக்கமான போட்டோக்களை போஸ்ட் செய்து, தன்னை பற்றி தனக்கு தெரிந்ததை விட தனது தங்கை அனமிற்கு அதிகம் தெரியும் என்று கேப்ஷனில் எழுதி இருந்தார். சானியா தனது சகோதரியை கஷ்டகாலங்களிலிருந்து தன்னை மீட்க்கும் நபர் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் சானியா தனது தங்கை தான் தனது முதல் குழந்தை என்று கூறி தனது உள்ளப்பாட்டை இணையத்தில் ஷேர் செய்தார்.
தங்கை அனமிற்கு மூத்த சகோதரியான சானியா தனது கடமைகளை எவ்வாறு செய்கிறார் என்பதைக் காட்டுகிறது. அனமின் திருமண நிகழ்வில் அனமின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைத்து ஒரு தாயாகவே தன்னை சானியா பாவித்துக்கொண்டார்.இன்ஸ்டாவில் இதுவரை 28k க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. இன்ஸ்டாகிராம் யூசர்கள் மூவரையும் குஷிப்படுத்தும் விதமாக பல கமெண்டுகளை போஸ்ட் செய்திருந்தனர், சிலர் ரெட் ஹார்ட் ஈமோஜிகளை இந்த போஸ்டிற்கு அளித்து தங்களது கருத்தை வெளிப்படுத்தினர்.




