Wednesday, February 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

நம்மாளுப்பா இவரு! விஜய் சேதுபதி-யின் தன்னிகரில்லா தருணங்கள்!

November 10, 2020
சினிமாத்தனமே இல்லாமல் தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் சில மறக்க முடியாத இன்டெர்வியூ தருணங்கள்..ரசித்த விஷயங்கள் இதோ!
vij

தரமான தருணங்கள்!

எல்லாரைப் போலவும் பாடி பில்டிங் பண்ணலயா என்று தொகுப்பாளர் கேட்க, “எல்லாரும் வெயிட் குறைக்க சொல்றாங்க ஆனா என பண்றது சாப்பாட்ட பாத்தா எச்சி ஊறுதே! கண்ட்ரோல் பண்ண முடில” என்று குழந்தைத் தனத்துடன் கூற நம் விஜய் சேதுபதியால் மட்டுமே முடியும்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்…!!

விஜய்சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ அமேசான் ப்ரைமில் வெளியீடு…!!

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தால் அபராதம் விதிப்பு…!!

பெரிய ஆடம்பரம் இல்லை, துளியும் கர்வம் இல்லை..சாதாரண உடைகள் அணிந்து, கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக யதார்த்தமாய் பதில் அளிக்கிறார் நம் ‘நடுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ நடிகர்

vij

ஒரு முறை தொகுப்பாளர் ஏதோ கேள்வி கேட்கும்போது, அவரது பிள்ளைகள் அவரை டாடி என்று கூப்பிடுவது போல குறிப்பிடவும், “டாடி இல்ல, அப்பா ” என்று உடனே திருத்தினார். பிள்ளைகள் அவரை அப்பா என்று தான் அழைப்பார்கள் என்பதை முக்கியமான ஒன்றாக அவர் மனதில் வைத்திருப்பது அழகு. மேலும் மேலும் ஆங்கிலத்தை ஆதரிக்கும் பெற்றோர் மத்தியில் இவரது இந்த கண்ணோட்டம் அழகாய் மிளிர்கிறது

பேட்டி ஒன்றின் போது, கண்ணாடி போட்டுக் கொண்டிருந்தார். “கண் எரியுது..அதான் கண்ணாடி போட்ருக்கேன்” என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தான் ஒரு நட்சத்திரம் என்பதை வெளிப்படுத்துவதே இல்லை இந்த மனிதர்

மக்கள் செல்வன் என்பதில் சிறிதும் தவறில்லை

தன் சொந்த குடும்பம் தவிர, ஒரு தீவிர ரசிகர் குடும்பமே இருக்கிறது இவருக்கு. எங்கு பார்த்தாலும் அவர்களுக்காக நேரம் ஒதுக்கி, துளியும் சலித்துக் கொள்ளாமல் அன்பைப் பரிமாறிக் கொள்கிறார். என் நெருங்கிய தோழி அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டாள், அவரைப் பற்றி ரசித்து ரசித்து அவள் பகிர்ந்த விஷயங்கள் ஒன்றா இரண்டா. வெளி அழகுக்காக பெண்களால் கொண்டாடப்படும் நட்சத்திரங்களுக்கு மத்தியில், பெண்கள் மனதில் மரியாதை சம்பாரித்து வைத்திருக்கிறார் என்பது பெரிய விஷயம். முத்தம் கேட்கும் அளவு ஒவ்வொரு இளைஞருக்கு உரிமை கொடுத்து, அதை உண்மையான அன்போடு பகிரும் நம் நாயகர் ரொம்ப ஸ்பெஷல் தானே!

இவர் பெண்கள் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கு எல்லையே இல்லை. பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இருந்தால் கண்டிப்பாக இவர் நடிப்பதில்லை. “நான் பெண்களை மிகவும் மதிக்கிறேன். அவர் ஒரு பெண்ணுக்குப் பிறந்து, சகோதரிகளுடன் வளர்ந்து, ஒரு பெண்ணை மணந்து, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாலும், ஆண்கள் புரிந்து கொள்ள முடியாத ஒன்று அவர்களின் உலகம்” என்று சிலிர்க்க வைக்கிறார்

vij

சும்மா யதார்த்தம் மட்டும் இல்லை, வியக்கும் அளவுக்கு ஞானம் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது இவரது பேச்சில். “இந்த உணர்வு எனக்கு கிடைக்கிறது, எனது பங்கு ஒருவேளை தேய்ந்துவிட்டதோ, என்னை நானே புதுப்பிக்க வேண்டும் என்று சொல்கிறது. நான் இப்போது அந்த உணர்வைப் பெறுகிறேன். இது எனக்கு விஷயங்களைச் சொல்கிறது … என் கதாபாத்திரத்தை மாற்றுவதற்காக, தோற்றத்தை சரிசெய்ய முயற்சி செய்வதற்காக..”

என் பார்வைகளை மற்றவர் மீது திணிக்கும் பழக்கம் இல்லை எனக்கு. சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுப்பது போல தான். எப்படி பெடல் பண்ணணும் னு சொல்லலாம், தள்ளி விடலாம். மற்றதெல்லாம் அவர்களோட முயற்சி..

96 படமும் நம் விஜய் சேதுபதியும்

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 96 படத்தில் த்ரிஷா இவரை பல ஆண்டுகள் கழித்து பார்க்கும் காட்சியில், கையில் பலூன் ஒன்றை வைத்திருப்பார். அது முற்றிலும் இவரது சிந்தனை தானாம். “அவனோட மனச வெளிப்படுத்த ஏதோ தேவைப்பட்டுச்சு. அங்க இருந்த பலூன்-ஐ எடுத்து வெச்சிகிட்டேன்” என்று விளக்குகிறார்

கேரளாவில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது, ஐந்தாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவன் என்னிடம் வந்து, கை கொடுத்துவிட்டு, ‘அங்கிள், 96 க்கு நன்றி’ என்று சொன்ன அந்த வாக்கியம் மனதில் நீங்காது இருக்கிறது. அவன் படத்தைப் புரிந்துகொண்ட விதத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வந்து, ‘அங்கிள், 96 செம்ம படம்’ என்று சொன்னால், நான் யோசித்திருக்க மாட்டேன் … ஆனால் நன்றி என்று கூறினான்

பள்ளிப் பருவக் காதலை மறக்காமல் வாழும் அப்பாவித்தனமும் அழகும் கலந்த பாத்திரத்தில் இவரை விட யாராலும் நன்றாகப் பொருந்திவிட முடியாது என்றே சொல்லலாம்

“ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்த்தால் பயமாகஇருக்கிறது. திரையில் வரும் என்னை மட்டுமே தெரிந்து கொண்டு இவ்வளவு அன்பா என்று. எனக்கு வரும் வித்தியாசமான எண்ணங்கள், விசித்திரமான கருத்துகள் எல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள்” என்று மனம் திறக்கிறார்

கதாபாத்திரத்தை கௌரவிக்கும் நாயகன்

சேதுபதி படத்தின் வேலைகளைத் தொடங்கியபோது, ​​வி.ஜே.எஸ் அருணிடம் (இயக்குனர் எஸ்.யூ.அருண்குமார்), இறுக்கமான சீருடை அணிய மாட்டேன் என்று கூறினார். “சிவாஜி [கணேசன்] சார் இதை தங்க பதக்கத்தில் தொடங்கினார். அப்போதிருந்து எல்லோரும் ஒரு கடினமான உடல் மொழியுடன் ஒரு போலீஸ்காரர் பாத்திரத்தை வெளிப்படுத்துகிறார்கள், ஆனால் உண்மையான வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு போலீஸ் நான் பார்த்ததில்லை. ஒரு போலீஸ்காரரின் தைரியம் அவரது உடலில் அல்ல, அவரது மனதில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன், ஏனெனில் 35-40 வயதுடைய, இரண்டு குழந்தைகளின் தந்தையாக இருக்கும் ஒரு போலீஸ்காரர் கடுமையாகச் செல்லத் தேவையில்லை, ”என்று கூறுகிறார்

vij

விக்ரம் வேதா படத்தில், விக்ரம் பாத்திரம் நீங்கள் விரும்பவில்லையா என்று கேட்ட போது, வேதா தான் வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவன் வாழ்க்கையை பார்க்கும் முறை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என்று கூறினார்

ஹாரிங்டன் அவனு – வில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் விஜய் சேதுபதி இரண்டாம் ஷோ தான் பார்ப்பாராம்

தனித்துவமும் உண்மையும் மிளிர்கிறது அவரது பேச்சில் மாஸ்டர் படத்தில் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெண் குழந்தை கடத்தல்…

Next Post

தீபாவளி சலுகையை அறிவித்த ரெனால்ட் நிறுவனம்.. ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி

Next Post

தீபாவளி சலுகையை அறிவித்த ரெனால்ட் நிறுவனம்.. ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version