தங்க ரேசரில் சேவிங் செய்யும் தொழிலாளி குவியும் வாடிக்கையாளர் ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அவினாஷ் திவாரி பகுதி முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று விளம்பரப்படுத்துவதற்காக தனது கடையில் புதிய முயற்சி ஒன்றை செய்து காட்டுகிறார்.
அதற்காக அவர் தங்கத்திலான ரேசர் ஒன்றை நகைக்கடையில் செய்து வாங்கியுள்ளார் இந்த அரசரின் மதிப்பு ரூபாய் 4 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சேவிங் செய்யும் போது இந்த நான்கு லட்சம் மதிப்புள்ள தங்க ரேசரில் தான் சேவிங் செய்து வருகிறார்.
தங்க ரேசரில் சேவிங் செய்து கொள்ள அவரது கடையை நோக்கி வாடிக்கையாளர்கள் குவிந்து வருகிறார்கள் இதனால் தனக்கு அதிக வருமானம் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தொழில் போட்டி அதிகமாக இருக்கும் நேரத்தில் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை செய்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை கவர முடியும் என தெரிவித்துள்ளார்.




