விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய Fusion Reactors எனப்படும் இணைவு உலைகளின் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளனர். தூய்மையான ஆற்றலை உருவாக்குவதே பிரதானமான கொள்கையாகக் கொண்டு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த உலகின் மிகப்பெரிய அணுசக்தி இணைவு(fusion) திட்டத்தை தெற்கு பிரான்சில் அமைக்கவுள்ளனர். இதன் நடவடிக்கைகள் 2025 இன் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. International Thermonuclear Experimental Reactor(ITER) என அழைக்கப்படும் இந்த திட்டம் 35 நாடுகளின் கூட்டு முயற்சியில் செயல்படவுள்ளது. “டோகாமாக்”(Tokamak) எனும் பிரம்மாண்டமான காந்தத்தின் மூலம் ஆற்றலை உருவாக்கவுள்ளனர்.
இணைவு சக்தி எனப்படுவது , இரண்டு அணுக்கருக்கள் (Atomic nucleus) வெளியிடும் ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு கனமான கருவை உருவாக்கி, அதை மின்சாரமாக மாற்றுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை துவக்குவதற்கு தேவைப்படும் ஆற்றலை விட அதிக ஆற்றலை இந்த இயந்திரம் உருவாக்கினால் நாம் சாதித்து விட்டோம் என எடுத்துக் கொள்ளலாம். இதனால் வணிக ரீதியாக தூய்மையான ஆற்றலை பயன்படுத்தலாம்.
வழக்கமான அணு உலைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?
வழக்கமான பிளவு அணுசக்தியை(Fission) விட இணைவு(Fusion) சக்தி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும், ஏனெனில் melt down எனப்படும் விபத்தோ அல்லது அணுக்கழிவுகளாலோ ஆபத்து இல்லை. தற்போது கட்டப்பட இருக்கும் இணைவு உலைகளுக்குள் மிகவும் சூடான பிளாஸ்மா முக்கிய பங்கு வகிக்கும். அவற்றை கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் சற்று கடினமானதாக இருக்கும். இதன் காரணமாக ITER மிகவும் சிக்கலான அதேசமயம் பாதுகாப்பான கட்டமைப்பாக உருவாக்கப்படும்.
அதன் இறுதியில், உலை 23,000 டன் எடையுள்ளதாக இருக்கும். அணுஉலையில் பிளாஸ்மா வெப்பநிலை சூரியனின் மையத்தின் வெப்பநிலையை விட பத்து மடங்கு அதிகரிக்கும். அதில் இருந்து ஆற்றலை எடுக்க 3,000 டன் சூப்பர் கண்டக்டிங் காந்தங்கள் (Super Conducting Magnets), 200 கிலோமீட்டர் சூப்பர் கண்டக்டிங் கேபிள்களால் இணைக்கப்படும். இவை அனைத்தும் -269 டிகிரி செல்சியஸ் வரை குளிரூட்டப்பட வேண்டும்.
Nuclear Fusion Energy எனப்படும் இணைவு ஆற்றலை அனைவருக்கும் கொண்டு சேர்க்க ஒரு பெரிய சர்வதேச முயற்சியாக ITER இருக்கும். ஆனால் அது மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் இது போன்ற ஏராளமான fusion energy Startup நிறுவனங்கள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.