கிரிக்கெட் விளையாடச் சென்ற இளைஞர் மின்னல் தாக்கிப் பலியானார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை குலாளர் தெருவில் வசித்து வந்தவர் சுந்தர். இவரது மகன் உதயமூர்த்தி.
இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வைகை ஆற்றின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மழை வர ஆரம்பித்தது. எனவே உதய மூர்த்தி வீட்டிற்குச் செல்ல தீர்மானித்து நடந்து சென்றுள்ளார்.
துரதிஷ்டமான அவர் செல்லும்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனால் அவருடன் சென்ற இளைஞர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தெரிகிறது. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




