![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2022/11/image_750x_637dce8d2c641.jpg?resize=750%2C469&ssl=1)
துருக்கியில் இன்று காலை அதிகாலை 4:08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் வடமேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்தான்புல் மற்றும் அங்காரா நகரங்களில் அதிக அளவு உணரப்பட்டுள்ளது.
துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு கூறுகையில், இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை எனவும் இஸ்தான்புல்லில் சிறிது நேரத்திலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 1999 ஆம் ஆண்டு துருக்கியின் டுஜ்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் 23 வது ஆண்டு நினைவு நாளில் துருக்கி நாடு தழுவிய பூகம்ப ஒத்திகையை நடத்தியது. ஒத்திகை நடத்தி சரியாக 10 நாட்களுக்குப் பிறகு அதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.