நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில், தயிர் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது. தினமும் சாப்பிட்டு முடிக்கும் பொது இறுதியாக தயிர் சாப்பிடும் பழக்கம் நம் எல்லோருக்கும் உள்ளது.
ஆனால் அந்தத் தயிரைக் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பதினால், என்னென்ன நன்மைகள் என்று உங்களுக்குத் தெரியுமா?
எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலப்படுத்துகிறது
நாம் தினமும் தொடர்ச்சியாக குழந்தைகளுக்குத் தயிர் கொடுத்து வருவதால், தயிரில் உள்ள அரிதான புரோட்டின், கால்சியம் மற்றும் பல வைட்டமின்கள் குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.
குழந்தைகளின் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது
நாம் தினமும் குழந்தைகளுக்குத் தயிர் கொடுத்து வருவதால்,தயிரில் உள்ள உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைகளின் வயிற்றுப் பிரச்சனைகளை சரிசெய்வது மட்டுமல்லாமல்,அவர்களின் ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.
குழந்தைகளின் எலும்புகளுக்கு பலன் தருகிறது
தயிரில் உள்ள கால்சியம், புரோட்டின் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் எலும்பினை உறுதிப்படுத்தி,உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது.
அடிக்கடி சளிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்கிறது
இயல்பான நாட்களில் குழந்தையின் உணவில் கட்டாயமாக தினமும் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் தொடர்ச்சியாகத் தயிரைக் கொடுத்து வரும்போது குழந்தைகளுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகி அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் உடலை நோய்க்கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது .
வீட்டில் தயாரிக்கும் தயிரே சிறந்தது
உங்கள் குழந்தைகளுக்கு இவ்வளவு நாள் தயிர் கொடுக்காமல் இருந்தால்,உடனே கொடுக்க ஆரம்பியுங்கள். ஆனால் இப்போது குழந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாக எல்லா ஃப்ளேவர்களிலும் தயிர் விற்பனைக்கு வர ஆரம்பித்து விட்டது. ஆனால் நாம் வீட்டில் சாதாரணமாக சாப்பிடும் தயிர்தான் அவற்றைவிட சிறந்தது. ஆதலால் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தயார் செய்யும் தயிரைக் கொடுத்தாலே போதுமானது.
பின்குறிப்பு
உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே சளிப்பிடித்து உடல்நிலை சரியில்லாத நேரம் மட்டும் தயிர் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், தயிரில் உள்ள குளிர்ச்சித் தன்மை இன்னும் உடலைக் குளிர்ச்சியாக்கும். அதனால் அந்த சமயத்தில் மட்டும் தயிரைக் கொடுக்க வேண்டாம் .உடல்நிலை இயல்பு நிலைக்கு வந்தபின் திரும்பவும் குழந்தைகளுக்குத் தயிரை தினமும் கொடுக்கலாம்.