Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே!!! காய்கள் மற்றும் பழங்களில் இவ்வளவு நன்மைகளா…

August 26, 2020
நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கள், பழங்களைக் குறித்ததான முழு விவரங்கள், எத்தனைப் பேருக்கு தெரியும்?? தெரியலனா, இப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க. அதில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது, அதை எப்பொல்லாம் உணவில் சேர்த்துக்கொள்ளனும், இதுபோல இன்னும் பல விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

நம்ம எல்லாருக்குமே, நோய் இல்லாம் ஆரோக்கியமா வாழனும்னு தான் விரும்புவோம். அப்படி விரும்பினால் மட்டும் போதாது. அதற்கு காய்கறிகள், பழங்கள் என்று நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக அன்றாட சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளில் அனைத்து வகை அத்தியாவசிய சத்துக்களான பொட்டாசியம், நார்ச்சத்து, போலேட் மற்றும் வைட்டமின்களில் ஏ, ஈ மற்றும் சி போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளனவா என்றும் கவனிக்க வேண்டும்.

மேலும் இந்த சத்துக்கள் அனைத்தும் ஒரே காயிலோ அல்லது பழத்திலோ கிடைத்து விடாது. எனவே அனைத்து விதமான காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும். ஆகவே எந்த காய்கறியில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன என்றும், அந்த காய்கறியை உணவில் சேர்த்தால் என்ன நன்மைகளைப் பெறலாம் என்றும், காய்கறிகளையும், அதன் நன்மைகளையும் குறித்தும் இங்கேப் பார்க்கலாம் வாங்க…காய்கள், பழங்களின் முழு தொகுப்புக் கீழே…

பலாவை வெட்டாமல் அதன் சுளைகளை எண்ணுவது எப்படி?

இயற்கை காய்கறிகளால் கரம் தூக்கிய பெண் விவசாயி : ஒரு ஏக்கரில் டாப்பு டக்கர்…!!!

நாட்டிலேயே முதன் முறையாக காய்கறிகளுக்கு அடிப்படை விலை எந்த மாநிலத்தில் தெரியுமா?

அவகேடோ(வெண்ணெய் பழம்)

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவகேடோ, தற்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளிலும், கேரளாவில் சில இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. இதில் கலோரிகள் அதிகமாக உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்போருக்கு இது பேருதவியாக இருக்கிறது. இதில் வாழையைவிட அதிக பொட்டாசியம் உள்ளது. கர்ப்பப்பையின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவுகிறது.

கிவி

கிவி சற்று புளிப்புச் சுவைகொண்ட பழம் என்பதால், சாலட் போன்றவற்றில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், சருமம், கூந்தலுக்கு நல்லது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. டி.என்ஏ. சிதைவுகளில் இருந்து காக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், .உடல் எடையை குறைக்கவும், செரிமான சக்தியை மேம்படுத்துவும் உதவுகிறது.

தக்காளி

தக்காளியில் வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் நிறைந்துக் காணப்படுகின்றது. இதில் இருக்கும் ஆல்பா-டொமாட்டின் (Alpha-tomatine) என்ற சத்து, ப்ராஸ்டேட், வயிறு, நுரையீரல், மார்பகப் புற்றுநோய்களைத் தடுக்கும் வல்லமைக் கொண்டது. தக்காளி இதய நோய்களைத் தடுக்கும், ரத்தத்தைச் சுத்திகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும், பார்வைத்திறனை மேம்படுத்தும், உடல் எடை குறைய உதவும், ரத்தக்கசிவு ஏற்படாமல் தடுக்கும், பித்தப்பைக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். மேலும், ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தக்காளியை சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பொலிவு பெறும்.

வெள்ளரி

கோடைக்கு உரிய காய்களில் ஒன்று தான், வெள்ளரி. இதைச் சாப்பிட்டுவர, உடலுக்குத் தேவையான சத்துக்கள் போதிய அளவில் கிடைக்கும். சீசன் இல்லாத சமயங்களில் வரும் அடர்பச்சை வெள்ளரியைத் தவிர்த்து, நாட்டுவெள்ளரியைச் சாப்பிட்டு வந்தால் நல்லது.

முள்ளங்கி

முள்+அங்கி – நோய்களில் இருந்து, முள் அங்கிப் போல இருந்து காப்பதால்,   முள்ளங்கி என்கிறோம். முள்ளங்கி யாருக்கெல்லாம் ஒத்துக்கொள்கிறதோ, அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.முள்ளங்கி சாப்பிட்ட பின் மூக்கில் தண்ணீர் வருவது அல்லது சளி பிடிப்பது போன்ற உணர்வு இருந்தால், நுரையீரலில் உள்ள கழிவை வெளியேற்றுகிறது என்று அர்த்தம்.

இதில் உள்ள வைட்டமின் சி, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் நார்ச்சத்து, தாமிரம், பொட்டாசியம், கால்சியம் ஆகியவை உள்ளன. சிறுநீரகத்தொற்றைச் சரிசெய்யும், சிறுநீரகக் கற்கள் உருவாகாது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.மூல நோய் இருப்பவர்கள், முள்ளங்கியை அவசியம் சாப்பிட வேண்டும். புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கவும், கெட்ட கொழுப்பைக் கரைக்கவும், மஞ்சள்காமாலையைக் குணமாக்க்வும், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இது பற்களுக்கும் நல்லது. உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவும். நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

உருளைக்கிழங்கு

வைட்டமின் சி, பி காம்ப்ளெக்ஸ் இருப்பதால், சருமத்துக்கு நல்லது. கால்சியம், மக்னீசியம் நிறைந்துள்ளன. தீக்காயங்களைச் சரிசெய்யும்.மூட்டு தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும். செரிமான சக்திக்கும், மூளை வளர்ச்சிக்கும், எலும்பு வளர்ச்சிக்கு உதவும். புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். அதிகமாக உதடுவெடிப்பு, ரத்தம் கசியும் ஈறுகள், வைரல் தொற்று உள்ளிட்ட நோய்கள் சரியாகும்.

பீட்ரூட்

நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் சி நிறைந்துள்ள பீட்ரூட், மூளையைச் சுறுசுறுப்பாக்கவும், ரத்தசோகையைக் குணமாக்கவும் உதவும். சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடலாம். பீட்டாசயனின் இதில் உள்ளதால், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், மறதி நோயைத் தவிர்க்கும், கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இது மூப்படைதலைத் தாமதப்படுத்தும், செரிமானப்பாதையை ஆரோக்கியப்படுத்தும், இதய நோய்கள் வராமல் தடுக்கும், எலும்பு அடர்த்திக் குறைதல் நோயைத் தடுக்கும். கணையம், மார்பகம், ப்ராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும்.

கேரட்

வைட்டமின் ஏ, சி, கே, பி8, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பீட்டாகரோட்டின் நிறைந்துள்ள கேரட், பார்வைத்திறனை அதிகரிக்கவும், கொழுப்பைக் கரைக்கவும் உதவும். சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்படவும், சருமப் பொலிவு மேம்படவும், ரத்த சிவப்பணுக்களை மேம்படவும் உதவும். எலும்பு, பற்களுக்கு நல்லது. இது கல்லீரலைப் பலப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண்களைக் குணமாகும், செரிமான சக்தியை அதிகப்படுத்தும். மேலும் இது நுரையீரல், பெருங்குடல், வயிறு தொடர்பான புற்றுநோய்களையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள், உமிழ்நீரை சீராகச் சுரக்கச்செய்து, பற்சொத்தை வராமல் தடுக்கும்.

காலிஃபிளவர்

காலிஃபிளவரில் கொலைன் சத்து இருப்பதால், மூளை வளர்ச்சிக்கு உதவும். இதில் ஒரு நாளுக்குத் தேவையான அளவு, வைட்டமின் சி நிறைவாக உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும், செரிமானப்பாதையைச் சீர்செய்யும். வயிற்று உபாதைகளைச் சரிசெய்யும், தசை வளர்ச்சிக்கு உதவும். நினைவுத்திறனை அதிகரிக்கும். எலும்பு அடர்த்தி குறைதல் பிரச்னையைக் கட்டுப்படுத்தும், புற்றுநோய் செல்களை அழிக்கவும், மெதுவாக உருவாகும் கட்டிகளை அழிக்கவும் உதவும். நாள்பட்ட நோய்களின் தீவிரமும் குறையும் வல்லமைப் படைத்தது.

புரோகோலி (பச்சை பூக்கோசு)

இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், கொழுப்பைக் குறைக்க உதவும். இதயத்தைப் பாதுகாக்கும். அலர்ஜியால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும்.கால்சியம் மற்றும் வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மூளையின் திறனை அதிகரிக்கும்.உயர் ரத்த அழுத்தப் பிரச்னையைச் சரிசெய்யும், இளநரையைத் தடுக்கும். ரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

முட்டைக்கோஸ்

வைட்டமின் சி, இரும்புச்சத்து நிறைந்து உள்ள முட்டைக்கோஸ், ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும். சரும நோய்கள் இருப்போர், முட்டைக்கோஸ் சூப் சாப்பிட நச்சுகள் வெளியேறும். கை, கால் நடுக்கம், நரம்புத்தளர்ச்சி பிரச்சனை சரியாகும்.

பாகற்காய்

ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும்,  கல்லீரலைப் பலப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிக்களை அழித்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இது சரும நோய்களைக் குணமாக்கும், மாரடைப்பைத் தடுக்கும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சுவாசப் பிரச்னைகளைச் சரிசெய்யும். கொழுப்பைப் படியவிடாது. தொற்றுநோய்களைப் போக்கும். பாகற்காய் பார்வைத்திறனை அதிகரிக்கும். உடலில் தேங்கும் யூரிக் அமிலம் உள்ளிட்ட கழிவுகளை வெளியேற்றும்.

பரங்கிக்காய்

பரங்கிக்காயில் வைட்டமின் சி, இ, பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன. நார்ச்சத்து நிறைந்தப் பரங்கிக்காய், செரிமானத் திறனை மேம்படுத்தும் மற்றும்  மலச்சிக்கலைப் போக்கும். தசைகள் வலுவாகும். குடல் புண்களைச் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும்.இதைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், சருமம் பொலிவடையும். இதய நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். நல்ல உறக்கத்தைத் தரும். கர்ப்பிணிகள் சாப்பிட்டுவர, கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். உடல் எடை அதிகரிக்க விரும்புவோர், இதை உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

வெண்டைக்காய்

ஃபோலிக் அமிலம் நிறைவாக இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட உகந்தது, வெண்டைக்காய். வைட்டமின் பி9 இருப்பதால், மூளைக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத்திறனை அதிகரிக்கும். ஆஸ்துமாவின் வீரியத்தைக் குறைக்கும் மற்றும் ரத்தசோகையைத் தடுக்கும். வயிறு தொடர்பான புற்றுநோய்களைத் தடுக்கும்.நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தும். வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் உள்ளதால், நினைவுத்திறன் அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

முருங்கைக்காய்

வைட்டமின் சி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைத்திறன் அதிகமாகும். கிட்டத்தட்ட 300 வகையான நோய்களைத் தடுக்கக்கூடிய சக்தி முருங்கைக்கு உண்டு.சருமப் பிரச்னைகளைச் சரிசெய்யும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.கால்சியம் உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கு உதவும். ஆண்மையைப் பெருக்கும்.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். கர்ப்பிணிகளுக்கு நல்லது. குழந்தையின்மை, இனப்பெருக்கக் குறைபாடுகள் குணமாக வாய்ப்புகள் அதிகம். மீனில் உள்ள சத்துக்கள் முருங்கையிலும் உள்ளது. கேரட்டைவிட 14 மடங்கு சத்துக்கள் முருங்கையில் உள்ளன. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

கத்திரிக்காய்

டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது கத்திரிக்காய். பைட்டோநியூட்ரியன்ட்ஸ் இருப்பதால், நினைவுத்திறன் அதிகரிக்கும். உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புச்சத்தைச் சமன்படுத்தும்.மூளைச் செல்களைப் பாதுகாக்கும்.இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும்.இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், கொழுப்பைக் கரைக்கும். புற்றுநோய் வராமல் காக்கும். இதய நோய்கள் வருவதைத் தடுக்கும். முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும்.நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஜீரணசக்தியை மேம்படுத்தும்.

அவரைக்காய்

கேரட்டில் இருப்பது போல பீட்டாகரோட்டின் அவரைக்காயிலும் உள்ளது. மேலும், வைட்டமின்கள் ஏ, சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நிறைந்துள்ளதால், புற்றுநோய் வராமல் காக்கும். இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும்.புதிய செல்கள் உருவாக உதவும். கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய நோய்களைத் தடுக்கும். சிறுநீரகக் கற்களைத் தடுக்கும். இதில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஃபோலேட் சத்துக்கள் கிடைக்கின்றன.

கோவைக்காய்

நார்ச்சத்து நிறைந்த கோவைக்காய், மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும். செரிமானத்துக்கு ஏற்றது. இதில் பீட்டாகரோட்டின், வைட்டமின் ஏ, சி, பி1, பி2 நிறைந்துள்ளன. சுவாசப் பிரச்னைகளைத் தடுக்கும். இதன் சாறு, சருமத்தைப் பளபளப்பாக்கும். நீர்ச்சத்தின் தேவையைப் பூர்த்திசெய்யும். ஹார்மோன் சுரப்பைச் சீராக்கும். இது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இதயப் படபடப்பு, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்தும். வயிறு தொடர்பான புண்களை சரிசெய்யவும் கோவைக்காய் உதவும்.

கொத்தவரங்காய்

கொத்தவரங்காயில் கால்சியம், பாஸ்பரஸ் உள்ளதால், எலும்புகள் உறுதியாகும். இதில் வைட்டமின் ஏ, பி, கே, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கலைத் தீர்க்கும். கெட்டக் கொழுப்பைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியப்படுத்தும்.உடலில் ரத்த உற்பத்தி சீராகும்.உடலுக்குத் தேவையான உயிர்சக்தி கிடைக்கும். மனஅழுத்தம், அதீத உணர்வுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த ஒரு வரபிரசாதம்.

வெங்காயம்

வெங்காயம் தொற்றுக்கள் வராமல் காக்கும். பற்சிதைவைப் போக்கும். சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். வறண்ட தொண்டை, இருமலைச் சரிசெய்யும். எலும்பு மெலிதலைத் தடுக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும், ரத்தத்தை சுத்திகரிக்க உதவும்,   மற்றும் ரத்தசோகையைக் குணமாக்கும். இது மாதவிலக்கை சீராக்கும். தோல் நோய்களைத் தடுக்க உதவும்.

வாழைப்பூ

இரும்புச்சத்து இருப்பதால், ரத்தசோகையைக் குணமாக்கும். அல்சர் பிரச்னைகளைச் சரிசெய்யும் பூ தான் வாழைப்பூ. இது மலச்சிக்கலைத் தீர்க்கும், உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களுக்கு பல விதத்தில் உதவும் இது, கர்ப்பப்பையை ஆரோக்கியமாக்கும், மாதவிடாய் பிரச்னைகளைச் சரிசெய்யும், மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியைத் தடுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டுவர, பால் அதிகமாகச் சுரக்க உதவும். இதை கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

வாழைத்தண்டு

சிறுநீரகக் கற்களை வெளியேற்றும். மீண்டும் கற்கள் சேராமல் தடுக்கும். தேவையற்ற நீரை வெளியேற்றி, சிறுநீரகத்தைப் பலப்படுத்தும். பித்தப்பையில் உள்ள கற்களை வெளியேற்றும். ஆனால், இதை தொடர்ந்து சாப்பிடக் கூடாது. மாதத்திற்கு இரு முறை மட்டும் சாப்பிட்டால் போதுமானது. ஜுஸாகக் குடிப்பது மிகவும் நல்லது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை மூடல் – விரிவானப் பார்வை

Next Post

ஐயோ பத்திகிச்சு கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பான ஆவணங்கள் இருந்த அறையில் தீ!!

Next Post

ஐயோ பத்திகிச்சு கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பான ஆவணங்கள் இருந்த அறையில் தீ!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version