லாக்டவுன் காலத்தில், அதுவும் குழந்தைகள் அனைவரும் வீட்டில் இருப்பதால், சாயங்காலம் ஆகிவிட்டாலே, இன்னைக்கு என்ன ஸ்நாக்ஸ் அம்மா என்றக் குரல் எல்லார் வீட்லயும் கேட்பது சகஜம் ஆகிவிட்டது. இன்னைக்கு என்ன செய்வது என்று பல அம்மாக்கள் யோசித்துக்கொண்டிருப்பீங்க.கவலையை விடுங்க, சத்தான, அதே சமயம் குட்டீஸ்களுக்கு பிடித்த கட்லட் எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.

உடல் ஆரோக்கியமாக இருக்க காய்கறிகளை தினமும் நன்கு சாப்பிட வேண்டும். ஏனெனில் அவற்றில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகவே அவற்றை எப்போதும் ஒரே விதமாக குழம்பு, பொரியல் என்று செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக கட்லட் செய்து சாப்பிடலாம். இப்போது அந்த வெஜிடேபிள் கட்லட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா…

தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 2
- கேரட் – 2
- பீன்ஸ் – 4
- பட்டாணி – சிறிதளவு
- தக்காளி – 1
- வெங்காயம் – 1
- கொத்தமல்லி – 1/2 கட்டு
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
- உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
- முட்டையை தனியே அடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை நன்றாக வதக்கி, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, ஆற வைத்து, தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- இதை, மசித்த உருளைக்கிழங்கு மற்றும் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியுடன் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.உப்பு சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.
- பிறகு அவற்றை தட்டையாக கட்லெட் போல் தட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ள கட்லட்டை, முன்னும் பின்னும் பொன்னிறமாக மொறுமொறுவென பொறித்து எடுக்கவும்.

அவ்வளவுதான் மொறு மொறுப்பான, அதே சமயம் சத்தான கட்லெட் தயார். இதற்கு டொமேட்டோ சாஸ் பொருத்தமாக இருக்கும்.
இதை உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான வடிவத்தில் செய்துக் கொடுத்து அசத்துங்கள்.




