மயிலாடுதுறை எம்.பி., சே.ராமலிங்கத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இதற்கு தலைவர்கள் மட்டும் விதிவிலக்கல்ல என்னும் வண்ணமாக, கொரோனா தொற்று தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை.
ஏற்கனவே நாகை எம்.பி., செல்வராசு மற்றும் சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.