தேவையான பொருட்கள்:
மைதா 1 கிலோ
தயிர் 100 மி.லி
சீனிபாகு
ஏலக்காய்
சுக்கு
உப்பு (தேவையான அளவு)
செய்முறை:
ஒரு கிலோ மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் விட்டு 100 மி.லி தயிர்விட்டு ஜெல்லி போன்ற பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் சிறிது சோடா உப்பு சேர்க்க வேண்டும். அதன்பிறகு அரை மணி நேரம் கழித்து சிறு,சிறு உருண்டைகளாக உருட்டி நல்லெண்ணெய்யில் பொரித்தெடுத்து அவற்றை சீனிப்பாகில் ஊற விட்டு எடுத்தால் பால்பன் ரெடி.
சீனி பாகில், ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்தால் வாசமாகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் சாப்பிட எதாவது வேண்டும் என்று கேட்டால் கடைகளில் கண்ட பொருட்களையும் வாங்கிக்கொடுக்காமல் இதை செய்து கொடுங்கள். அப்புறம் குழந்தைகள் உங்களை இப்படித்தான் பாராட்டுவார்கள், அதாவது, மை மாம் இஸ் பெஸ்ட் இன் தி வேர்ல்டு (my mom is best in the world).