இரவில் நீண்ட நேரம் கண் விழித்தல், கணினி செயல்பாடு, செல்போன் பயன்படுத்துவது, டிவி பார்ப்பது ஆகிய காரணங்களால் கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல் ஏற்பட்டு வறட்சி ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க சில டிப்ஸ்:
*தினமும் 8 மணி நேர உறக்கம் அவசியம்.
* ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.
* தேவையான ஓய்வை சரியாக கடைபிடிக்க வேண்டும்.
*எதிர்பாராத சூழ்நிலையில் கண்களில் தூசி விழுந்தால், தூய்மையான குளிர்ந்த நீரால் மட்டுமே கண்களை கழுவ வேண்டும்.
*அந்த கண்களில் எண்ணெய் அல்லது சுய மருத்துவ முறையில் சொட்டு மருந்து விடுவது கூடாது. ஏனெனில் இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
* தொலைக்காட்சி, செல்போன் ஆகியவற்றை போதிய வெளிப்புற வெளிச்சத்தில் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
*இருட்டில் இருந்து பயன்படுத்தும் போது அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு கண் படலத்தை பாதிக்கக் கூடும்.
*தொடர்ந்து கணினியை இயக்குபவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 முறை கண்களை சிமிட்ட வேண்டும்.
*வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். இது உடல் சூட்டை தணித்து கண்களுக்கு குளிர்ச்சியை தரும்.
*கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை வாரத்திற்கு 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
* பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
*பல்வேறு நிறங்கொண்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.