கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக கைகளை கழுவ அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் சோப்பு போதுமானது என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
உலக மக்களை வாட்டி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தனிப்பட்ட மருந்துகள் ஏதும் இல்லாத நிலையில், முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மற்றும் அடிக்கடி கைகளை கழுவுவது போன்றவை முக்கிய நடவடிக்கைகளாக கருதப்படுகிறது.
இதனிடையே, சானிடைசர் கொண்டு கழுவதால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும் என வெளியான செய்திகளால், மருந்தகங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று மல்லுக்கட்டி பாட்டில் பாட்டில்களாக சானிடைசர்களை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், கைகளை கழுவ சானிடைசர் அவசியம் இல்லை எனவும், சாதாரண சோப்பு தண்ணீரால் நன்றாக கைகளை கழுவினாலே போதுமானது எனவும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. தண்ணீர் இல்லாத இடத்தில் மட்டுமே சானிடைசரை பயன்படுத்துங்கள் என இந்த மையத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த சானிடைசரில் குறைந்த பட்சம் 60 சதவீதமாவது ஆல்கஹால் இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க நிபுணர்கள் மட்டுமின்றி, பல்வேறு சுகாதார அமைப்புகளும் சாதாரண சோப்பு தண்ணீரால் கைகளை கழுவுவதை சிறந்த நடைமுறையாக கூறுகிறது.
அதேபோல், மாஸ்க்கை தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் பயன்படுத்தும் என்95 போன்ற மாஸ்க்குகளை தினமும் துவைத்தால் கந்தலாகி விடும். அதற்காக சிலர் அதில் சானிடைசர் தெளித்து சுத்தம் செய்கின்றனர். இதில் உள்ள ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டது என்பதால் சுவாசிக்கும்போது ரத்தத்தில் கலந்து விடும். மாஸ்க்கை சோப் தண்ணீரில் முக்கி அலசினாலே போதும். ஒரு வேளை சானிடைசர் தெளித்தால், 48 மணி நேரத்துக்கு அதை பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்துகின்றனர்.
சானிடைசர் பயன்படுத்தும் முறை:
- சானிடைசரில் குறைந்த பட்சம் 60 சதவீதத்துக்கு மேல்ஆல்கஹால் இருந்தால்தான் வீரியமாக இருக்கும்.
- எப்போதும் சோப்பால் மட்டுமே கைகளை சுத்தமாக 20 நொடிகளுக்கு கழுவினால் போதும்.
- மாஸ்க்கை சானிடைசர் அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்யாதீர்கள்.
- சானிடைசர் பயன்படுத்தியதும், உடனே அந்த கையால் உணவை சாப்பிடாதீர்கள். கெமிக்கல் வயிற்றுக்குள் சென்றால், கொரோனாவை விட மற்றொரு ஆபத்து வந்து விடலாம்.
- தண்ணீர் இல்லாத இடத்தில் மட்டுமே சானிடைசர் பயன்படுத்தலாம். நறுமணமுள்ள சானிடைசர் வேண்டவே வேண்டாம் என் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.