ஆரோக்கியமான, பாரம்பரிய சிறுதானிய ரோஸ்ட் தோசை, குதிரைவாலி அரிசி வச்சு எப்படி செய்றதுனு தெரிஞ்சுக்கலாம் வாங்க..
தோசைனா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் தான். ஆனா, தினமும் ஒரே வகையான தோசையே செஞ்சா எல்லாருக்கும் போர் அடிச்சிடும். ரவை தோசை, முட்டை தோசை, பொடி தோசை, வெங்காய தோசை இது போல 100-க்கும் அதிகமான தோசை வகைகள் இருக்கு. ஆனா, இப்பல்லாம் எல்லாரும் பாரம்பரிய முறைக்கு திரும்பிட்டு இருக்குறதுனால, இன்னைக்கு நல்லா மொறுமொறுனு, அதுவும் மூனே பொருள்கள் வச்சு, சத்தான, பாரப்பரிய சிறுதானிய ரோஸ்ட் தோசை, எப்படி செய்றதுனு பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- குதிரைவாலி புழுங்கல் அரிசி – 2 பங்கு
- குதிரைவாலி பச்சரிசி – 2 பங்கு
- உளுந்து – 3/4 பங்கு
செய்முறை
- மேழே சொல்லியிருக்குற 3 பொருள்களையுமே, நல்லாக் கழுவி, கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஊற வச்சுக்குங்க.
- 6 மணிநேரம் கழிச்சு, ஊறவைச்ச அரிசிய, தோசை மாவு பதத்துக்கு அரைச்சு எடுத்துக்கோங்க.
- அரைச்ச மாவை, புளிக்க வைச்சு எடுத்தீங்கனா, சிறுதானிய ரோஸ்ட் தோசைக்கு மாவு தயார்.
படத்துல காமிச்சிருக்குற மாதிரி, நல்லா மொறுமொறுனு, வீட்ல எல்லாருக்கும் செஞ்சு கொடுத்து அசத்துங்க. சாம்பார், சட்னி வச்சும் சாப்பிடலாம். இல்லனா, வெறும் தோசை மட்டுமே சாப்பிட்டா கூட நல்லாதான் இருக்கும். அப்புறம் பாருங்க, எல்லாரும் சிறுதானிய ரோஸ்ட் தோசை எப்ப செஞ்சு கொடுப்பீங்கனு கேக்குற அளவுக்கு மாறிடுவாங்க. எங்க வீட்டு நண்டு சிண்டு, இதுக்கு தொப்பி தோசைனு பேர் வெச்சிருக்காங்க …