தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகன், அடுத்ததாக விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

பல முன்னணி நடிகைகள் விஜய்யுடன் நடிப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது, மாளவிகா மோகனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.

தற்போது பாலிவுட்டுக்கு பறக்க உள்ளார் மாளவிகா மோகனன். பாலிவுட்டில் பிரபல நடிகரான ரன்வீர் சிங்கின் அடுத்த படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த நிலையில், சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி கலர் ஆஃப் பேரடைஸ், வில்லோ ட்ரீ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படஙக்ளை இயக்கிய இயக்குனர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.

பொது முடக்கத்தால் வீட்டில் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்க மாளவிகா மோகன் போட்டோ ஷூட் நடத்தி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


