மக்களைச் சந்திக்க அ.தி.மு.க.வினருக்கு பயமில்லை எஜ்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

நகரும் நியாயவிலைக்கடை
மதுரையில் கூட்டுறவுத் துறை சார்பாக 5 அம்மா நகரும் நியாய விலைக் கடை வாகனத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
மக்களைச் சந்திக்க தயார்
தமிழக மக்கள் எதையும் ஆராய்ந்து பார்க்கக் கூடியவர்கள். அது நாடே அறியும், மக்கள் முன்பு தைரியமாக ஓட்டு கேட்கிறோமே. இதுவே பெரிய சாதனை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசுதான் அ.தி.மு.க. அரசு.
மற்ற கட்சிகள் அனைத்தும் கோட்டையில் இருந்து மக்களைப் பார்த்தார்கள்.
ஆனால், அ.தி.மு.க. அரசு மக்களிடம் இருந்து கோட்டையை பார்த்தது. அதுதான் அதிமுக அரசு. மக்களை சந்திக்க எங்களுக்குப் பயமில்லை. மக்களின் வாக்குறுதியை நிறைவேற்றவே நாங்கள் இருக்கிறோம். திமுக ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா?.
ஜனநாயகம்
அ.தி.மு.க. ஆட்சியில் ஜனநாயகம் காக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் யாருக்காவது எந்த இடையறாது செய்தோமா?
எதிர்க்கட்சித் தலைவரின் தொகுதிக்கு அவர் கேட்காமலேயே 20 நடமாடும் நியாய விலைக் கடை வழங்கி இருக்கிறோம். கொரோன காலத்தில் உயிரை துச்சமாக நினைத்து மக்களோடு பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம்.
ஓடி ஒளியவில்லை
தி.மு.க.வை போல் நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை. எனக்கு கரோனா வந்த பிறகும்கூட குணமாகி மீண்டும் வந்து மக்கள் பணியில் ஈடுபட்டேன். கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு எங்களுடைய ஆட்சியில் இரண்டு முறை ஊதிய உயர்வு வழங்கி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.




