.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என அமைச்சர் தகவல்.
சமீப காலமாகவே அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தனது எல்லை மீறி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும் 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு நேரும் என்பதாலும் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் கல்விக் கட்டணம் உயரும் என்பதாலும் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.